Thane Relief Work

The CSR arm of Vikatan Group with the generous support of its readers undertook several initiatives to rehabilitate and rebuild the lives of those affected by Cyclone Thane in 2012.

Ambalavanan pettai and Kurinjipadi Refugee camps: Monthly provisions like rice, cooking oil, pulses along with clothing and bedsheets were distributed for 310 poor families in Ambalavanan pettai and Kurinjipadi at an estimated cost of Rs.5 lakhs.

Naduthittu village: Only source of living for the 70 poor families in this village were the produce from cashew trees cultivated in less than 1½ acres. With all the cashew trees uprooted by Cyclone Thane they have lost their hope of living. Vikatan has taken up the initiative of removing the uprooted trees spread across 170 acres in Naduthittu village at a cost of Rs.10 lakhs.

Medical Camps: Vikatan has undertaken conducting of medical camps with a team of 20 doctors and 10 supporting staff in the villages of Cuddalore district. This is conducted once in two weeks with camps being conducted in Pathirakottai and Puthur villages till now. The required medicines are distributed free of charge to all the village households. These camps were conducted at an estimated cost of Rs.7 lakhs.

Housing Project: Thiyagavalli village in Cuddalore district was identified to provide housing to 16 poor families who have lost not only their houses but also all other belongings. This work was done at an estimated cost of Rs.5 lakhs.

Thazhanguda Fishing village: Vikatan has repaired large boats which have been damaged, and replaced small boats totally destroyed by Cyclone Thane in Thazhanguda Fishing village. We have also provided new fishing nets to the fishermen community in this village.

Renovation of School buildings: Vikatan has renovated 7 school buildings which were damaged due to the storm.

Published articles link

தானே தாண்டவம் !

2012 புத்தாண்டை வரவேற்கத் தயாராக இருந்த புதுச்சேரிவாசிகளுக்கு, துயரமே பரிசாக வந்தது. துயரத்தின் பெயர் 'தானே’ புயல். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சுனாமி என்னும் பெருந் துயர் பதித்துப்போன சோகச் சுவடுகளின் மேல் காலம் இன்னொரு காயத்தை ஏற்படுத்திப் போயிருக்கிறது.

READ MORE

'தானே' துயர் துடைத்தோம்!

நடுத்திட்டுக் கிராமத்துக்குள் இப்போது போய்ப் பார்த்தாலும், நமக்குக் கண்களில் நீர்கோக்கிறது. 'தானே’ கோர தாண்டவத்தால் சாய்ந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியை நாம் அந்தக் கிராமத்தில் தொடங்கி ஒன்றரை மாதங்கள் ஆகின்றன. சுமார் 100 ஏக்கர் பரப்பில் விழுந்துகிடந்த மரங்களைத் தினமும் 32-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெட்டி அப்புறப்படுத்திவருகிறார்கள். பெரிய மரங்களின் கிளைகளை வெட்டிவிட்டோம்.

READ MORE

'தானே' துயர் துடைத்தோம்!

தானே புயல் பாதித்த கடலூர் பகுதி மக்களின் துயர் துடைக்கும் திட்டத் தின் கீழ் இந்த முறை நாம் உதவித் தொகை அளித்தது, ஏழை மாணவ - மாணவியரின் கல்விச் செலவுக்காக.இலங்கையில் இருந்து வந்து கடலூர் மாவட்டத்தில் முகாம் அமைத்துத் தங்கி இருக்கும் தமிழ் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதில்தான் விகடன் தானே துயர் துடைக்கும் திட்டமே தொடங்கியது.

READ MORE

'தானே' துயர் துடைத்தோம்!

தானேவால் பாதிக்கப்பட்ட சகோதரர்களின் வாழ்வில் இருளைப் போக்கி விளக்கேற்றுவதுதான் நம் அனைத்து நலத்திட்டங்களின் அடிப்படை நோக்கம். அதில் ஒன்று, வெளிச்சத்தையே கொடுப்பது!வறுமையின் எல்லையில் அல்லல்படும் குடும்பத்துப் பிள்ளைகள் தங்கிப் படிக்கும் விடுதிகள் கடலூர் மாவட்டத்தில்தான் ஏராளம்.

READ MORE

’தானே’ துயர் துடைத்தோம்!

கடலூர் மாவட்டம், அம்பலவாணன்பேட்டை அகதிகள் முகாமில் வசிக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை பிப்ரவரி 10-ம் தேதி வழங்கிய தகவல் அனைவரும் அறிந்த செய்திதான். அப்போது அவர்கள் கவலையோடு கைகாட் டிய இடம் முகாமுக்குள் அமைந்து இருந்த மாலை நேரப் பள்ளிக்கூடம்.

READ MORE

'தானே' துயர் துடைத்தோம்!

'மரம் வைத்தோம்’ என்பதுதான் பெருமைக்குரியது. 'மரத்தை வெட்டினோம்’ என்பதையும் பெருமையாகச் சொல்லத்தக்கதாய் மாற்றிவிட்டது 'தானே’! புயல் காற்றின் கோர தாண்டவத்தில் கடலூர் மாவட்டத்து நிலப்பரப்பில் வாழும் மக்களைவிட, மரங்களுக்கு நேரிட்ட பாதிப்புகள் மிக மிக அதிகம். ஆனால், அந்தச் சோகம் வெளிச்சத்துக்கு வராமலும் மற்றவர்களால் அதிகம் உணரப்படாமலுமே போனது.

READ MORE

'தானே' துயர் துடைத்தோம்!

நொச்சிக்காடு கிராமத்துப் பெண்களுக்கு 20 தையல் இயந்திரங்களை வாங்கிக் கொடுத்து, அவர்களின் தினசரி வருமானத்துக்கு வழி செய்த 'விகடன் தானே துயர் துடைப்பு அணி’, அதே பெண்களுக்கு இன்னொரு தொழில் வாய்ப்பையும் உருவாக்கிக்கொடுத்துள்ளது. அது, சானிடரி நாப்கின் உருவாக்கும் பயிற்சி!

READ MORE

தானே துயர் துடைத்தோம்!

கடலூர் வட்டாரத்தில் 'தானே’ தாண்டவத்தின் மூலமாகக் கொல்லப்பட்ட மரங்களுக்குப் பரிகார மாக, மரங்களை மறுபடியும் வைப்பதுதானே சரி. நம்முடைய துயர் துடைப்புப் பணியின் இறுதிக் கட்டமாக அமைந்தவை, மரம் நட்டு வளர்க்கும் திட்டம்!

READ MORE

'தானே' அழிந்த நகரங்களின் கதை!

'எல்லாச் சாலைகளும் ரோமை நோக்கியே’ என்பதுபோல... புதுவையின் அனைத்துச் சாலைகளும் கடற்கரையை நோக்கியே நீள்கின்றன! அழகிய சாலைகள்,பாரம் பரியக் கட்டடங்கள், அடர்ந்து நிற்கும் மரங்கள், உபசரிப்புக் கலாசாரம் ஆகியவை பொதிந்துகிடந்த புதுவையின் அழகு இன்று பாழ்பட்டுக்கிடக்கிறது.

READ MORE

'தானே' துயர் துடைத்தோம்!

கோடானுகோடி வளங்களைக்கொண்டது கடல். ஆனால், தன் உடல், பொருள், உயிர் அத்தனையும் அடகுவைத்துக் கடலுக்குள் மூழ்கி எழும் மீனவனுக்கு மிஞ்சும் பணமோ, மீன் கழிவுகளைவிடக் குறைவானதுதான். இதிலும் சில ஆண்டுகளாகச் சிக்கல். கடல்புரத்தைக் காக்கும் சட்டங்கள் மூலம் கரையில் இருந்து மீனவர்களை வெகு தூரத்துக்கு அப்புறப்படுத்தும் அநியாயச் சட்டத்தை ஆட்சியாளர்கள் கொண்டுவர...

READ MORE

'தானே' துயர் துடைத்தோம்!

புயலோ, பூகம்பமோ அந்த மக்களைத் தாக்கவே தேவை இல்லை. எப்போதுமே அப்படித்தான் இருக்கிறார்கள். இருக்க இடம் இல்லாமல்... நகரைவிட்டு விலகி, ஓரமான ஒரு பகுதியில், மண் வீடுகளும் ஓலைக் குடிசைகளுமாக வாழ்ந்துவருகிறார்கள். 'வாழ்ந்து’ என்று சொல்வதுகூட அடையாளத்துக்காகத்தான், நாட்களைக் கழித்துவருகிறார்கள்!

READ MORE

'தானே' துயர் துடைத்தோம்!

'தானே’ தாக்குதலுக்கு உள்ளான கடலூர் மாவட்ட எல்லைக்குள் இருக்கின்றன இலங்கைத் தமிழர்கள் வசிக்கும் அம்பலவாணன்பேட்டை மற்றும் குறிஞ்சிப்பாடி மறுவாழ்வு முகாம்கள். பேரினவாதத் தாக்கு தலில் சிக்கித் தாக்குப்பிடிக்க முடியாமல் கடல் கடந்து வரத் தொடங்கியவர்களைத் தாய்த் தமிழகம் அரவணைத்து வரவேற்றது. அவர்களுக்கெனத் தனித்தனிக் குடியிருப்புகள் கட்டித் தங்கவைத்தது. இத்தகைய முகாம்கள் தமிழ்நாட்டில் 100 ஊர்களில் உள்ளன.

READ MORE

'தானே' துயர் துடைத்தோம்!

கிராமம் என்று சொல்வதைவிடத் தீவு எனலாம். ஒரு பக்கத்தில் உப்பனாறு. இன்னொரு பக்கத்தில் கடலூர் கடல். இரண்டுக்கும் மத்தியில் தண்ணீரிலும் கண்ணீரிலும் மிதக்கும் பகுதி இது. கடலோரத்தில் இருப்பவர்கள் மீன்பிடித் தொழிலைச் செய்கிறார்கள். மற்றவர்கள் தினக் கூலிகள். அரை ஏக்கர், ஒரு ஏக்கர் என வைத்திருப்பவர்கள்கூட சவுக்கு போட்டு, வெட்டி விற்பனை செய்வதைத் தவிர, வேறு விவசாயம் எதுவும் செய்ய முடியாத நிலைமை.

READ MORE

'தானே' துயர் துடைத்தோம்!

'நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே... இன்றிருந்தால் என்னாவோம்!’ என்று பாரதி கலங்கி எழுதிய பாட்டுக்குக் காரணம், புயல்தான். அவர் புதுவையில் வாழ்ந்த வீடு புயலால் நொறுங்கி விழுந்தபோது, எதிர் வீட்டுக்குக் குடி மாறி இருந்தார். தான் தப்பிப் பிழைத்த சோகத்தைச் சொல்ல இப்படி ஒரு கவிதையைப் படைத்தார்.

READ MORE

'தானே' துயர் துடைத்தோம்!

தானே தாண்டவமாடிய தியாகவல்லியில் முதல் தவணையாக 22 வீடுகளைக் கட்டிக் கொடுத்தோம். இதோ அடுத்த 22 வீடுகளை அந்தப் பகுதியில் கட்டி முடித்து உரியவர் களிடம் ஒப்படைத்து இருக்கிறோம்.'தானே’ தாக்கி ஆறு மாதங்கள் முழுமையாக உருண்டோடிவிட்டன. ஆனால், அந்தப் பகுதி மக்களின் துயரங்களுக்கு இன்னும் முழு நிவாரணம் கிடைக்கவில்லை. வீடு இழந்த சொந்தங்கள்...

READ MORE

தானே துயர் துடைத்தோம்!

‘சொந்த சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டு சிந்தை கலங்காமல் இருக்க முடியுமா நம்மால்?’ என்று விம்மிப் பொருமிய லட்சக் கணக்கான விகடன் வாசகர்களின் உதவியோடு ஒரு தலைமுறையை மீட்டெடுத்திருக்கிறது விகடனின் 'தானே’ துயர் துடைப்புத் திட்டம்! கடலூர் மற்றும் புதுவை பகுதியின் வளத்தை வாரிச் சுருட்டிய 'தானே’ சீற்றத்தைக் களைவதில் கடந்த ஒரு வருடமாக முழு முன்னெடுப் புடன் பணியாற்றிவந்தது விகடன் 'தானே’ துயர் துடைப்பு அணி.

READ MORE

'தானே' துயர் துடைத்தோம்!

'தானே’ தாக்குதலில் கல்விக் கோயில்களும் கரைந்தன பல இடங்களில். அரசாங்கப் பள்ளிக் கட்டடங்களின் தரம் அனைவரும் அறிந்ததுதான். ஆயுதங்கள் வாங்க ஆயிரமாயிரம் கோடிகளில் பட்ஜெட்டில் பணம் ஒதுக்கும் இந்த நாட்டில்தான்... அறிவுக் கோயில்கள் இன்றும் மரத்தடிகளில் நடக்கின்றன. ஒரே கட்டடத்துக்குள் ஒன்பது வகுப்பறைகள். எப்போது இடிந்து விழுமோ என்ற நிலையில் மேற்கூரைகள்.

READ MORE

'தானே' துயர் துடைத்தோம்!

புயலைவிட வேகமா வேலை பார்க் கிறீங்க!'' - தியாகவல்லி கிராம மக்கள் மலைத்துப் போய்ச் சொன்னது இது! கல்லும் மண்ணும் அள்ளிப் போட்டுக் கட்டி... கையில் கிடைத்த கூரைகளால் வேய்ந்து... வாழ்ந்த வீடுகளை 'தானே’ புயல் சூறையாடிச் சுருட்டி எறிந்த கண்ணீர் காயும் முன்னே...

READ MORE

'தானே' துயர் துடைத்தோம்!

நீங்கள் படித்த பள்ளிக்கூடத்துக்கு மகாத்மா காந்தி வந்திருக்கிறாரா? லால்பகதூர் சாஸ்திரி வந்திருக்கிறாரா? வினோபா பாவே அல்லது நேரு வந்துள்ளனரா? காமராஜர் அல்லது கக்கன் வந்தது உண்டா? இதில் யாராவது ஒருவர் வந்திருக்கலாம். ஆனால், இவர்களும் இவர்களைப் போன்ற தலைவர்களும் காலடித் தடம் பதித்த பள்ளி ஒன்று சிதம்பரம் பகுதியில் இருக்கிறது. அது.... 'சென்னை அரசாங்க நந்தனார் மாணவர் உயர்நிலைப் பள்ளி’! சுருக்கமாக, நெருக்கமாக எல்லார்க்கும் அது 'நந்தனார் பள்ளி’!

READ MORE

விகடன் தானே துயர் துடைப்பு அணி

விகடன் தானே துயர் துடைப்பு அணி

READ MORE

'தானே' துயர் துடைக்க... நீளட்டும் நம் கரங்கள்!

தர்மபுரி - திருப்பத்தூர் சாலையில் இருந்து மூன்று கிலோ மீட்டர் உள்வாங்கி இருக்கிறது, குட்டூர் அரசு ஆரம்பப் பள்ளி. மேலாண்டிஅள்ளி, கீழாண்அள்ளி, குட்டூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஏழைக் குழந்தைகள் 59 பேர் இங்கு படிக்கின்றனர். இந்தப் பள்ளியின் ஆசிரியை விஜயலட்சுமி, விகடனில் வந்த தலையங்கத்தை தன் பள்ளிக் குழந்தைகளிடம் படித்துக் காட்டி இருக்கிறார். உடனே, துயர் துடைப்புக்கான நிதி திரட்டுவதற்கு தலைமை ஆசிரியர் வேலுமணியிடம் குழந்தைகள் அனுமதி கேட்டிருக்கிறார்கள்.

READ MORE

தலையங்கம்

புதுச்சேரி மாநிலத்தையும் கடலூர் மாவட்டத்தையும் தாக்கிய 'தானே’ புயல் ஏற்படுத்திய சேதங்கள் நம் தலைமுறை காணும் பயங்கர அவலங்களில் ஒன்று. புயல் வந்தது, பெரும் காற்று அடித்தது, சில நாட்கள் அவஸ்தையைக் கொடுத்தது என்பது மாதிரி இல்லை இது. இன்னும் 20 ஆண்டுகளுக்கு என்ன செய்வதென்ற கேள்விக்குறியை அவர்கள் வாழ்க்கையில் விதைத்துவிட்டுப் போயிருக்கிறது.

READ MORE

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

'தானே’ புயல் நிவாரணத் திட்டத்துக்காக விகடன் குழுமம் விறுவிறுப்பாகக் களப் பணியாற்றிவருவதை, விகடன் குழும இதழ்கள் வாயிலாகவும் www.vikatan.com/thane வலைதளம் வாயிலாகவும் உங்களுக்குத் தொடர்ந்து தெரிவித்துவருகிறோம். விகடனோடு கைகோத்து இந்த நிவாரணப் பணிகளுக்கு வாசகர்களாகிய நீங்கள் உலகம் முழுவதிலும் இருந்து தொடர்ந்து நிதி உதவி அளித்துவருகிறீர்கள்.

READ MORE

ஆதரவு தந்த அத்தனை நல்ல இதயங்களுக்கும் அன்பும் நன்றியும்!

ஆதரவு தந்த அத்தனை நல்ல இதயங்களுக்கும் அன்பும் நன்றியும்!

READ MORE